குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சகம் இந்த அடிப்படையில் டென்மார்க்கை விட்டு வெளியேறிய மக்களின் விகிதத்தில் ஒரு வீழ்ச்சி காண்பிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், மற்ற ஐரோப்பிய நாடுகள் முறையே 10.7 மற்றும் 22.5 சதவீத புகலிடம் கோருவோரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
இது 2016 ல் 48 சதவிகிதம் ஆகவும் 2017 ல் 34 சதவிகிதம் ஆகவும் இந்த விகிதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சட்டம் மற்றும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான மார்லன் கான், டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான குடியேற்றங்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான ஒழுங்கான உடன்பாடு இல்லாததை ஒட்டி தாம் ஆச்சரியப்படுவதாகக் கூறினார்.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அரசாங்க தலைவர்கள் Brussels இல் ஒரு உச்சி மாநாட்டில் சந்தித்தனர், அங்கு இடம்பெயர்வு மற்றும் அகதிகளை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றிய விவகாரம் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.