இன்னொரு பிரபாகரன்தான் தோன்ற வேண்டும்..!
Share

வடபகுதியில் குற்றச் செயல்கள் துரிதமாகப் பெருகி வரு வதைக் காண முடிகின்றது. திருட்டு, கொள்ளை, கொலை, போதைப் பொருள்களின் விற்பனை ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையும் காண முடிகின்றது. (New Prabhakaran northern province)
வவுனியாவில் இரவு வேளையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த எட்டு மாதக் குழந்தையை வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சிலர் கடத்திச் சென்றமை வடக்கின் பாதுகாப்பு நிலைமை எந்த அளவில் உள்ளதென்பதைத் தூலம்பரமாக எடுத்துக்காட்டிவிட்டது.
இரவு வேளையில் நிம்மதியாகப் படுத்து உறங்க முடியாத அளவுக்கு சமூக விரோதிக ளின் தொல்லை இங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இடைக்கிடை வாள்வெட்டுச் சம்பவங்களுக்கும் குடாநாட்டில் குறைவில்லை. வடபகுதி மக்கள் அமைதியை விரும்புபவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள்.
ஆனால் ஒரு சிலரின் அடாவடித்தனங்கள் அனைத்து மக்களுக்கும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டன. எதிர்காலத் தலைவர்களாக உருவாக வேண்டிய இளைஞர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றமை தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
நிலைமை இவ்வாறு தொடருமானால் வடபகுதியின் எதிர்காலமே சூனியமாகிவிடும். இங்குள்ள அரசியல்வாதிகள் குடாநாட்டின் தற்போதைய அவல நிலை தொடர்பாகச் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மாகாண சபையும் எமக்கு அதிகாரம் வழங்கப்படாததால் எதையுமே செய்ய முடியவில்லை யெனப் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறது.
வடபகுதி மக்கள் செய்த பாவம்தான் என்ன? அவர்களைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு பிரபாகரன்தான் தோன்ற வேண்டும்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:New Prabhakaran northern province,New Prabhakaran northern province,New Prabhakaran northern province,