தெற்கில் வெடித்த சர்ச்சை : இராணுவப் பேச்சாளருக்குத் தடை
Share

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தடைவிதித்துள்ளார். mullivaikkal remembrance day army spokesman issue
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடக்கும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளரும் பங்கேற்று வந்தார்.
அண்மையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாகவும், இறுதிப் போர் தொடர்பாகவும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன சில கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தக் கருத்துக்களுக்கு இராணுவப் பேச்சாளர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
ராஜித சேனாரத்னவின் கருத்துக்கள் தெற்கில் கடும் சர்ச்சையை தோற்றுவித்திருந்ததுடன், இராணுவ அதிகாரிகள் மத்தியிலும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ராஜித சேனாரத்னவின் கருத்துக்களை கண்டித்து. அவர் பங்கேற்கும் ஊடக மாநாட்டை இராணுவம் புறக்கணிக்க வேண்டும் என்று சில கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமத் அத்தபத்துவை, வாராந்த ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்கு இராணுவத் தளபதி தடைவிதித்துள்ளார் என்று கூறப்படுக்கிறது.
இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையில், இராணுவ அதிகாரி ஈடுபடவேண்டும் என்பதே இராணுவத் தளபதியின் நிலைப்பாடு.
சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்று இராணுவத் தளபதி கூறியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
-
-
- வவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்
- தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது
- போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
- சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்
- கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி
- வற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் !
- பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்
- “சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:mullivaikkal remembrance day army spokesman issue,mullivaikkal remembrance day army spokesman issue,
-
-
-
-