பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
Share

(Tamil man incident Maharagama)
மஹகரகம பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் செய்த செயல் சிங்களவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் நடந்து சென்ற நபர் ஒருவரை அங்கு வேகமாக வந்த கார் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதனை அவதானித்த அங்கிருந்த தமிழ் இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் குறித்த காரை துரத்திச் சென்றுள்ளார்.
மஹரகம பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரை தமிழ் சாரதி மடக்கி பிடித்துள்ளார்.
மடக்கி பிடித்த சந்தேகநபரை தனது வாகனத்திலேயே ஏற்றி சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தும் உள்ளார்.
சந்தேகநபரை பரிசோதித்த போது அவர் அதிகளவு மதுபானம் அருந்தியிருந்தார் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருப்பையா நிர்மலசந்திரன் என்ற தமிழர் ஒருவரே சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சமகாலத்தில் வாகன விபத்துக்கள் தொடர்பில் சாட்சி வழங்குவதற்கே தயங்கும் நபர்களுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சாரதியை பிடிப்பதற்கு முயற்சித்த தமிழ் இளைஞனை பாராட்ட வேண்டும் என மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி புத்திக்க அபேகோண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹரகம மாநகர சபையின் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு வாகனத்தில் மோதுண்டுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி, களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு அதிகாரி மஹரகம மாநகர சபைக்கு முன்னால் உள்ள ஹய்லெவல் வீதியை கடக்க முயற்சித்த போதே கொட்டாவ பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற கார் மோதியுள்ளது.
தமிழ் இளைஞரின் உதவியாலேயே குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக தெரிவிக்கும் பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:Tamil man incident Maharagama ,Tamil man incident Maharagama
-
-
-