Type to search

இன்றைய ராசி பலன் 18-05-2018

இன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்

இன்றைய ராசி பலன் 18-05-2018

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Today horoscope 18-05-2018 )

இன்று!

விளம்பி வருடம், வைகாசி மாதம் 4ம் திகதி, ரம்ஜான் 2ம் திகதி,
18.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 11:50 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 7:12 வரை;
அதன் பின் திருவாதிரை நட்சத்திரம், சித்த யோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கேட்டை
பொது : சதுர்த்தி விரதம். விநாயகர், மகாலட்சுமி வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் நகை, பணம் இரவம் கொடுப்பது கூடாது.

ரிஷப ராசி நேயர்களே !
அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். நண்பரால் உதவி உண்டு.

மிதுனம் ராசி நேயர்களே !
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பெண்களுக்கு உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். தகுதிக்கு மீறி யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.

கடக ராசி நேயர்களே !
திட்டமிட்டபடி செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்

சிம்ம ராசி நேயர்களே !
யாருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடலாம். நண்பரால் உதவி கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே !
கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்டமங்கு அதிகரிக்கும். பணக்கடனில் பெரும்பகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினனின் அன்பை பெறுவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே !
குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மற்றவர் வியப்படைவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவர். விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவம் பாதுகாப்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்களுக்கு வீட்டுத்தேவை ஓரளவு நிறைவேறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மகர ராசி நேயர்களே !
சிரமம் குறுக்கிட்டாலும் முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம் ராசி நேயர்களே !
மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் ராசி நேயர்களே !
சமயோசிதமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். சுபவிஷயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today horoscope 18-05-2018

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like